கிரிக்கெட் (Cricket)

கவுன்ட்டி கிரிக்கெட்: 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய சாய் கிஷோர்..!

Published On 2025-08-01 15:38 IST   |   Update On 2025-08-01 15:38:00 IST
  • முதல் இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
  • 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இங்கிலாந்தின் செஸ்டரில் துர்காம்- சுர்ரே அணிகளுக்கு இடையிலான கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சுர்ரே அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் விளையாடி வருகிறார்.

முதல் இன்னிங்சில் துர்காம் 153 ரன்னில் சுருண்டது. சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் சுர்ரே முதல் இன்னிங்சில் 322 ரன்கள் குவித்தது.

169 ரன்கள் பின்தங்கிய நிலையில் துர்காம் அணி 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 344 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சாய் கிஷோர் அபாரமான பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். 113.4 ஓவரில் 41.4 ஓவர்கள் வீசினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சுர்ரே 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News