கிரிக்கெட் (Cricket)
டி20-யில் அதிகமுறை டக்: அப்ரிடியை முந்தினார் பாபர் அசாம்
- ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாபர் அசாம் டக்அவுட் ஆனார்.
- இது அவரின் 9வது டி20 டக்அவுட் ஆகும்.
பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. சாஹிப்சதா பர்ஹான் (16) ஆட்டமிழந்ததும், பாபர் அசாம் களம் இறங்கினர். இவர் 3 பந்துகளை சந்தித்த நிலையில் எவன்ஸ் பந்தில் டக்அவுட் ஆனார்.
டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் 9ஆவது டக் இதுவாகும். இதன் மூலம் அதிக முறை டக்அவுட் ஆன பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.