null
ஒருவழியா.. 7 ஆண்டுகளுக்கு பிறகு அசத்திய குல்தீப் யாதவ்
- இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஆட்டநாயகானக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எமிரேட்ஸ் அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4, வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதை குல்தீப் தட்டிச் சென்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் கடைசியாக அவர் 2018 -ம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.
மேலும் 7 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆசிய கோப்பை டி20 போட்டியில் இது 2-வது சிறந்த பந்துவீச்சாகும். புவனேஷ்வர் குமார் 2022-ம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.