கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை 50-க்கு மேல் ரன்கள் குவித்த 4-வது வீரர்: ஜோரூட் சாதனை

Published On 2024-12-07 15:46 IST   |   Update On 2024-12-07 15:46:00 IST
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை 50+ ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.
  • இந்த பட்டியலின் 5-வது இடத்தில் ராகுல் டிராவிட் (99 முறை) உள்ளார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 125 ரன்னில் சுருண்டது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்திருந்தது. ரூட் 73 ரன்னிலும் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இந்த போட்டியில் அரை சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை 50+ ரன்களை குவித்த 4-வது வீரர் என்ற சாதனையை ரூட் படைத்துள்ளார்.

இதில் முதல் வீரராக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் உள்ளார். அவர் 119 முறை 50+ ரன்களை அடித்துள்ளார். 2-வது 3-வது இடங்கள் முறையே தென் ஆப்பிரிக்கா வீரர் கல்லீஸ் (103 முறை), ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் (103 முறை) ஆகியோரை தொடர்ந்து ரூட் 4-வது இடத்தில் உள்ளார். 5-வது இடத்தில் ராகுல் டிராவிட் (99 முறை) உள்ளார். 

Tags:    

Similar News