விளையாட்டு

பிரத்யுஷா போடா - திவ்யா தேஷ்முக்

செஸ் ஒலிம்பியாட் இறுதி சுற்று: இந்திய மகளிர் அணியில் திவ்யா தேஷ்முக்-பிரத்யுஷா போடா வெற்றி

Update: 2022-08-09 09:30 GMT
  • திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
  • இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா வெற்றி பெற்றார்.

சென்னை:

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய மகளிர் பி அணியில் விளையாடிய திவ்யா தேஷ்முக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை 33-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அதைபோல இந்திய மகளிர் சி அணியில் விளையாடிய பிரத்யுஷா போடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தான் வீராங்கனையை 41-வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

Tags:    

Similar News