விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென், சிங்கப்பூரி ஜேசன் டே உடன் மோதினார்.
முதல் செட்டை லக்ஷயா சென் 21-16 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை ஜேசன் டே 21-15 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்ஷயா சென் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.