விளையாட்டு
சிம்ரன் ஹெட்மயர்- சுனில் கவாஸ்கர்

தாமதமாக களம் இறங்கிய ஹெட்மயர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முடிவு தவறானது- சுனில் கவாஸ்கர்

Published On 2022-05-03 13:43 IST   |   Update On 2022-05-03 13:43:00 IST
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிம்ரன் ஹெட்மயர் தாமதமாக களம் இறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் நிதிஷ் ரானா, ரிங்கு ஆகியோர் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் சிம்ரன் ஹெட்மயர் தாமதமாக களம் இறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளரான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

பினிஸ்சர் என்றால் 14-வது ஓவர் அல்லது 15-வது ஓவரில் களமிறங்குவது என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி அல்ல அவரது ஆட்ட திறனைப் பார்த்து அவரை சில ஓவர்களுக்கு முன்னாள் கூட களமிறங்க வைக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சிம்ரன் ஹெட்மயரை தாமதமாக களமிறங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முடிவில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News