விளையாட்டு
கொல்கத்தா அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது குஜராத்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்து அசத்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராள சுப்மன் கில் - சகா ஆடினார். 7 ரன்னில் கில் வெளியேறினார். அடுத்ததாக குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சகாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
குஜராத் அணி 83 ரன்கள் இருக்கும் போது உமேஷ் யாதவ் பந்து வீச்சில் சகா 25 ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த டேவிட் மில்லர் 27 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய பாண்ட்யா அரை சதம் அடித்தார். 69 ரன்களில் இருந்த அவர் சவுத்தி பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தெவாட்டியா 17, ரஷித் கான் 0, அபினவ் மனோகர் 2, பெர்குசன் 0, டயல் 0 என அடுத்தடுத்து வெளியேற குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது. இதனால் கொல்கத்தா அணி 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கும்.
கொல்கத்தா அணி தரப்பில் ரசல் 4 விக்கெட்டும், சவுத்தி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையும் படியுங்கள்...நோபால் விவகாரம்- ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் உள்பட 3 பேருக்கு அபராதம்