விளையாட்டு
எம்.எஸ்.தோனி

அதிக டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார் தோனி

Published On 2022-04-03 20:50 GMT   |   Update On 2022-04-03 23:47 GMT
இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்
மும்பை:

15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 

இதில் பங்கேற்றதன் மூலம் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.  

நேற்றைய போட்டி அவர் விளையாடிய 350வது டி20 போட்டி ஆகும். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 372 டி20 போட்டிகளில் விளையாடி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார். 

336 டி20 போட்டிகளில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னா இந்த பட்டியிலில் 3வது இடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்  கேப்டனாக இருந்த தோனி, இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு,கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News