விளையாட்டு
மார்க் வுட்

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் மார்க் வுட்- லக்னோ அணிக்கு பின்னடைவு

Published On 2022-03-18 10:20 GMT   |   Update On 2022-03-18 10:20 GMT
ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.5 கோடி செலுத்தி மார்க் வுட்டை வாங்கியது.
புதுடெல்லி:

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் பங்கேற்க உளள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த மார்க் வுட், கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என இஎஸ்பிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இணைந்துள்ள புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.5 கோடி செலுத்தி மார்க் வுட்டை வாங்கியது. தற்போது அவர் காயத்தால் விலகியது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக உள்ளார். ஆண்டி பிளவர் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News