விளையாட்டு
முதல் விக்கெட்டுக்கு 158 ரன் குவித்த ஆஸ்திரேலிய ஜோடி

ராவல்பிண்டி டெஸ்ட் - 3ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 271/2

Published On 2022-03-07 05:55 IST   |   Update On 2022-03-08 00:20:00 IST
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கவாஜா, வார்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது.
ராவல்பிண்டி:

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னிலும், இமாம் உல்  ஹக் 157 ரன்னிலும் வெளியேறினர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் களமிறங்கினர்.

இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்த நிலையில், வார்னர் 68 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவாஜா 97 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய லபுஸ்சனே, ஸ்மித் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். லபுஸ்சனே அரை சதமடித்தார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இறுதியில், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. லபுஸ்சனே 69 ரன்னுடனும், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போதைய நிலையில் பாகிஸ்தான் அணி 205 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Similar News