விளையாட்டு
ஜடேஜா

ஒரே டெஸ்டில் 175 ரன்கள், 5 விக்கெட்டுகள் - சாதித்த ஜடேஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த சிஎஸ்கே

Published On 2022-03-07 03:19 IST   |   Update On 2022-03-07 03:19:00 IST
இந்திய வெற்றிக்கு காரணமான ஜடேஜாவுக்கு சச்சின், வாசிம் ஜாபர் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மொகாலி:

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார் ரவீந்திர ஜடேஜா. 

இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175  (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார்.

ஜடேஜா பந்துவீச்சிலும் அசத்தினார். இலங்கையின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன், ஒரே டெஸ்டில் 150-க்கும் அதிகமான ரன்களை குவித்ததுடன், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.

முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தும், பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் அபாரமாக செயல்பட்ட ஜடேஜாவுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதேபோல், சச்சின் டெண்டுல்கர், வாசிம் ஜாபர் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Similar News