விளையாட்டு
வெற்றியைக் கொண்டாடும் இந்திய வீரர்கள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை - 5வது இடம்பிடித்தது இந்திய அணி

Published On 2022-03-07 00:56 IST   |   Update On 2022-03-07 00:56:00 IST
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணி 38 சதவீத வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது.
துபாய்:

இந்தியா, இலங்கை  அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகான  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.

இதில் 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் 2-வது இடத்திலும் , 66 சதவீத வெற்றியுடன் இலங்கை 3-வது  இடத்திலும், 60 சதவீத வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க அணி 4-வது  இடத்திலும் உள்ளது.

இந்தப் பட்டியலில் 54 சதவீத வெற்றியுடன் இந்திய அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது.

Similar News