விளையாட்டு
சதமடித்த பாபா இந்திரஜித்

ரஞ்சி கோப்பையில் பாபா இந்திரஜித் அசத்தல் சதம் - முதல் நாள் முடிவில் தமிழகம் 256/7

Published On 2022-03-04 04:56 IST   |   Update On 2022-03-04 04:56:00 IST
ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தியுள்ளார்.
கவுகாத்தி:

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.

கவுகாத்தியில் நடந்த ‘எப்’ பிரிவு ஆட்டத்தில்  தமிழக அணி ஜார்க்கண்ட் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, தமிழக அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கௌஷிக் காந்தி 10 ரன்னிலும், சூர்யபிரகாஷ் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய பாபா அபராஜித் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பாபா இந்திரஜித் நிலைத்து  நின்று விளையாடினர். அவருக்கு சாய்கிஷோர் நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

அவர் 132 பந்துகளில் 100 ரன்கள் குவித்து இந்திரஜித்  ஆட்டமிழந்தார். அதேபோல் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் சாய் கிஷோர் 81 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் தமிழக அணி  7 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. நாராயண் ஜெகதீஷன் 10 ரன்னுடனும் முகமது 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஜார்க்கண்ட் அணி சார்பில் ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், அங்குல் ராய் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Similar News