செய்திகள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இலங்கை அணி வீரர்கள்

கல்லெ டெஸ்ட் - வெஸ்ட் இண்டீசை 187 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

Published On 2021-11-25 18:50 GMT   |   Update On 2021-11-25 18:50 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டி இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் முதல் இன்னிங்சில் 3 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார்.
கல்லெ:

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன்னில் அவுட்டானது. கேப்டன் கருணரத்னே 147 ரன்னும், டி சில்வா 61 ரன்னும், நிசங்கா 56 ரன்னிலும் வெளியேறினர். 

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், வாரிகன் 3 விக்கெட்டும், காப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கைல் மேயர்ஸ் 45 ரன்னும், பிராத்வெயிட் 41 ரன்னும், கார்ன்வால் 39 ரன்னும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரமா 4 விக்கெட்டும், மெண்டிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. கருணரத்னே 83 ரன் எடுத்தார். மேத்யூஸ் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

அடுத்து, 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜோஷ்வா டி சில்வா 54 ரன் சேர்த்தார். பானர் 68 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டும், லசித் எம்பல்டெனியா 4 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக கேப்டன் திமுத் கருணரத்னே தேர்வு செய்யப்பட்டார்.
Tags:    

Similar News