செய்திகள்
இந்தியாவுக்கு 133 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நமீபியா
அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்த இந்தியாவுக்கு 133 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நமீபியா.
டி20 உலக கோப்பையில் இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் பிராட் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். மைக்கேல் வான் லிங்கன் 15 பந்தில் 14 ரன்கள் அடித்தார்.
அடுத்து வந்த கிரேக் வில்லியம்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். கேப்டன் ஜெரார்ட் எராமஸ் 20 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டேவிட் வீஸ் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். 9-வது வீரராக களம் இறங்கிய ஜான் பிரைலிங்க் 15 பந்தில் 15 ரன்களும், அடுத்து வந்த ரூபென் டிரம்பெல்மேன் 6 பந்தில் 13 ரன்களும் அடிக்க நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்தது.
இந்திய அணி சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், பும்ரா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.