செய்திகள்
மைக்கேல் வாகன்

இந்தியாவை 'யூஸ்லெஸ்' என சாடிய மைக்கேல் வாகன்- 4வது டெஸ்ட்டுக்கு பின் என்ன சொன்னார் தெரியுமா?

Published On 2021-09-07 10:30 GMT   |   Update On 2021-09-07 15:08 GMT
எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
லண்டன்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் வெற்றி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் வாகன், இந்திய அணியை 'யுஸ்லெஸ்' என்று சாடியிருந்தார். அப்படிப்பட்டவர் தற்போது இந்தியாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.  

அவர், 'எப்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் சிலர் மிகச் சிறப்பாக திறனை வெளிக்காட்டுவார்கள். இந்தியா அப்படியான ஒரு அணி. எப்போது நன்றாக விளையாட வேண்டுமோ அப்போது அதைச் செய்து காட்டியுள்ளது.

இந்தியா, மிக வலுவான அணியாக உள்ளது. விராட் கோலி, யுக்திகளை வகுப்பதில் திறமையுடன் செயல்பட்டார். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை அவர் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டினார்' எனக் கூறியுள்ளார்.
Tags:    

Similar News