செய்திகள்
பதக்கம் வென்றவர்கள்

டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் தங்கம் வென்றார்

Published On 2021-08-01 15:45 IST   |   Update On 2021-08-01 15:45:00 IST
அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் ரஷ்ய வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 12-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் காசனோவ்-ஐ எதிர்கொண்டார்.

இதில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றிப்பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வியடைந்த காசனோவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். 



பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் செக்குடியரசு ஜோடி சுவிட்சர்லாந்து ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

Similar News