செய்திகள்
எம்மா மெக்கியான்

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் வென்று சாதனை

Published On 2021-08-01 14:07 IST   |   Update On 2021-08-01 14:07:00 IST
ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4x400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர்.

ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான்  இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்கு தங்கப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.

இதற்கு முன் 1952-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஓட்டோ ஒரே ஒலிம்பிக்கில் ஆறு பதக்கங்கள் வென்றது சாதனையாக இருந்தது. அதை 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் நடேலி காங்லின் ஆறு பதக்கங்கள் வென்று சமன் செய்திருந்தார்.



தற்போது எம்மா மெக்கியான் ஏழு பதக்கங்கள் பெற்று அவர்களது சாதனையை முறியடித்துள்ளார்.

எம்மா மெக்கியான் 4x100மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ பட்டர்ஃப்ளை, 100மீ பேக்ஸ்ட்ரோக், 4x200மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ ஃப்ரீஸ்டைல், 200மீ பேக்ஸ்ட்ரோக், மிக்ஸ்டு 4x100மீ மிட்லே ரிலே ஆகியப் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்.

Similar News