செய்திகள்
பி.வி.சிந்து

பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வெல்வாரா? சீனா வீராங்கனையுடன் இன்று மோதல்

Published On 2021-08-01 07:30 GMT   |   Update On 2021-08-01 07:30 GMT
பி.வி.சிந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவை சேர்ந்த ஹி பி ஜியாவ்வை சந்திக்கிறார்.

டோக்கியோ:

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றவருமான பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் லீக் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் முதல் ஆட்டத்தில் இஸ்ரேலை சேர்ந்த பொலி கார்போவை 21-7, 21-10 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் ஆங்காங் வீராங்கனை நகன் யூ சென்ங்கை 21-9, 21-6 என்ற கணக்கிலும் வீழ்த்தினார்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து டென்மார்க்கை சேர்ந்த பிளிச் பெல்ட்டை 21-15, 21-13 என்ற கணக்கிலும், கால்இறுதியில் 5-வது வரிசையில் உள்ள யமகுச்சியை (ஜப்பான்) 21-13, 22-20 என்ற கணக்கிலும் வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரை இறுதியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். 7-வது வரிசையில் உள்ள அவர் 18-21, 12-21 என்ற கணக்கில் 2-ம்நிலை வீராங்கனையான தாய் சுயிங்கிடம் (சீன தைபெ) தோற்றார்.

அவரால் ஒரு செட்டை கூட வெல்லமுடியவில்லை. அந்த அளவுக்கு தாய் சு யிங்கின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது.

பி.வி.சிந்து இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீனாவை சேர்ந்த ஹி பி ஜியாவ்வை சந்திக்கிறார். இதில் அவர் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெறுவாரா? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

சீன வீராங்கனை தர வரிசையில் 9-வது இடத்தில் உள்ளார். இதனால் பி.வி.சிந்து நம்பிக்கையுடன் விளையாடுவார். 


Tags:    

Similar News