செய்திகள்
கோப்புபடம்

ஐரோப்பிய கால்பந்து போட்டி: இங்கிலாந்து அணி ஏமாற்றம் - ஸ்காட்லாந்துடன் மோதிய ஆட்டம் ‘டிரா’

Published On 2021-06-19 08:23 GMT   |   Update On 2021-06-19 08:23 GMT
செக்குடியரசு- குரோஷியா அணிகள் (‘டி’ பிரிவு) மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

லண்டன்:

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டும் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 11 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

‘இ’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. போர்ஸ்பெர்க் 77-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார். சுவீடன் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி 4 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. சுலோவாக்கியா முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி 3 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது.

செக்குடியரசு- குரோஷியா அணிகள் (‘டி’ பிரிவு) மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 37-வது நிமிடத்தில் பேட்ரிக்ஸ்கிக் (செக் குடியரசு) பெனால்டி மூலம் கோல் அடித்தார். 47-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்காக இவான் பெர்சிச் கோல் அடித்தார்.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து ( ‘டி’ பிரிவு ) மோதின.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 -வது சுற்றுக்கு முன்னேறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டி கோல் எதுவுமின்றி டிரா ஆனது. இதனால் இங்கிலாந்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.

இந்தப் பிரிவில் செக் குடியரசு, இங்கிலாந்து அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. குரோஷியா, ஸ்காட்லாந்து அணிகள் ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்றுள்ளன.

இன்று மாலை 6.30 மணிக்கு ‘எப்’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ்-அங்கேரி மோதுகின்றன. பிரான்ஸ் வெற்றி பெற்றால் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

இதேபிரிவில் 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. ஜெர்மனி அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. முதல் ஆட்டத்தில் பிரான்சிடம் தோற்றதால் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

போர்ச்சுக்கல் தொடக்க ஆட்டத்தில் அங்கேரியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இதனால் ஜெர்மனியை வீழ்த்தினால் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின்-போலந்து (‘இ’ பிரிவு) மோதுகின்றன. ஸ்பெயின் அணி தொடக்க ஆட்டத்தில் சுவீடனுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற வேண்டும்.

Tags:    

Similar News