செய்திகள்
சச்சின் தெண்டுல்கர், ஷபாலி வர்மா

சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் கடந்து ஷபாலி வர்மா சாதனை

Published On 2021-06-18 16:52 GMT   |   Update On 2021-06-18 16:52 GMT
இங்கிலாந்து பெண்கள் அணிக்கெதிராக இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து- இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் 17 வயது 139 நாட்களே ஆன இளம் வீராங்கனை ஷபாலி வர்மா அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 96 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்துள்ளார்.

இதனால் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த இளம் கிரிக்கெட்டர் வரிசையில் சச்சின் தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் 1990-ம் ஆண்டு 17 வயது 107 நாட்கள் ஆகும்போது இரண்டு இன்னிங்சிலும் இங்கிலாந்துக்கு எதிராக 50 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.



தற்போது ஷபாலி வர்மா 17 வயது 139 நாட்களில் சாதனைப் படைத்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த சார்லோட் எட்வர்ட்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 1998-ல் 18 வயது 232 நாட்களில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதத்திற்கு மேல் அடித்திருந்தார்.
Tags:    

Similar News