செய்திகள்
சவுத்தாம்ப்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள்
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கெதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்கான நேற்றுமுன்தினம் இரவு மும்பையில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்தது.
வீரர்கள் தங்கனை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பயிற்சி மேற்கொள்வார்கள். இறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டனர். ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், உமேஷ் யாதவ், பும்ரா சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இருந்து எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டுள்ளனர்.
Touchdown pic.twitter.com/3GGt0yoIiJ
— K L Rahul (@klrahul11) June 3, 2021
Hello Southampton! 🏏 pic.twitter.com/qSATFLZ3b0
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) June 3, 2021
We are in Southampton @RishabhPant17 😊 pic.twitter.com/9qebdWFFPO
— Rohit Sharma (@ImRo45) June 3, 2021