செய்திகள்
டு பிளிஸ்சிஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே

Published On 2021-04-19 16:18 GMT   |   Update On 2021-04-19 16:18 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எந்தவொரு பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காத நிலையில், சேத்தன் சகாரியா 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ருத்துராஜ் 10 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. என்றாலும் டு பிளிஸ்சிஸ் 33 ரன்னிலும், மொயீன் அலி 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது சிஎஸ்கே 9.2 ஓவரில் 75 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் சிஎஸ்கே வீரர்கள் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. என்றாலும் ரெய்னா (18), அம்பதி ராயுடு (27), டோனி (18), சாம் கர்ரன் (13), பிராவோ (20 நாட்அவுட்) ஓரளவிற்கு ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது.



ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேத்தன் சகாரியா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
Tags:    

Similar News