செய்திகள்
பார்சிலோனா

கோபா டெல் ரே கோப்பையை வென்றது பார்சிலோனா

Published On 2021-04-18 11:22 GMT   |   Update On 2021-04-18 11:22 GMT
மெஸ்சி இரண்டு கோலும், கிரிஸ்மான் மற்றும் டி ஜாங் தலா ஒரு கோலும் அடிக்க அத்லெடிக் கிளப்பை வீழ்த்தி பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்குள் நடைபெறும் கால்பந்து தொடர்களில் ஒன்று கோபா டெல் ரே. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.

இதில் பார்சிலோனா- அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கிரிஸ்மோன் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 3 நிமிடத்தில் டி ஜாங் ஒரு கோலும், மெஸ்சி 68-வது மற்றும் 72-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோலும் அடித்தனர். இதனால் பார்சிலோனா 4-0 என முன்னிலைப் பெற்றது.



13 நிமிடத்திற்குள் நான்கு கோல் அடித்து அத்லெடிக் கிளப்பிற்கு அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
Tags:    

Similar News