செய்திகள்
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, கொரோனா விதிமுறையை மீறினாரா?
கால்பந்து போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ரொனால்டோ, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகின் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ. போர்ச்சுகல்லை சேர்ந்த இவர் இத்தாலியின் ஜூவாண்டஸ் கிளப் அணியில் விளையாடி வருகிறார்.
தற்போது கால்பந்து போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ரொனால்டோ, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தனது காதலி ரோட்ரிக் பிறந்த நாளுக்காக துரின் நகரிலிருந்து 150 கி.மீட்டர் பயணம் செய்து கோர் மேயுர் பகுதிக்கு சென்று உள்ளார் என்று பல்வேறு இத்தாலி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இத்தாலியில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுபாடுகள் பற்றி துரின் நகரில் இருந்து ஜோடியாக வெளியேற கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ரொனால்டோ மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.