செய்திகள்
கோப்புபடம்

ஐ.எஸ்.எல். கால்பந்து 6-வது வெற்றி ஆர்வத்தில் கோவா அணி ஈஸ்ட் பெங்காலுடன் இன்று மோதல்

Published On 2021-01-29 12:53 IST   |   Update On 2021-01-29 12:53:00 IST
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 75-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணியும் ஈஸ்ட் பெங்கால் அணியும் மோதுகின்றன.

கோவா:

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இன்று இரவு நடக்கும் 75-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

கோவா அணி இதுவரை 13 ஆட்டத்தில் 5 வெற்றி, 3 தோல்வி, 5 டிராவுடன் 20 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கோவா அணி வீரர் இகோர் அங்குலோ (ஸ்பெயின்) இதுவரை 9 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவர் அந்த அணியின் நட்சத்திர வீரராக உள்ளார்.

அதேபோல் ஜார்ஜ் மென்டோசா, இஷான் பண்டித், தேவேந்திர முர்கோன்கர் போன்ற வீரர்கள் உள்ளனர். கோவா அணி வலுவாக இருப்பதால் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ட் பெங்கால் இதுவரை 13 ஆட்டத்தில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது.

5 ஆட்டத்தில் தோற்றும், 6 போட்டியில் டிரா செய்தும், 12 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. அந்த அணி வெற்றி பெற முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஈஸ்ட் பெங்கால் அணியில் மேட்தி ஸ்டெய்ன்மன், ஜாக்ஸ் மாக்கோமா தலா 3 கோல்கள் அடித்துள்ளனர். இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Similar News