செய்திகள்
விஜய் சங்கர் திருமணம்

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் திருமணம்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாழ்த்து

Published On 2021-01-28 16:03 IST   |   Update On 2021-01-28 16:03:00 IST
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரருமான விஜய் சங்கர் வைஷாலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். விஜய் சங்கர் 12 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடுகிறார். 

வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதைக் கடந்த ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வைஷாலியை விஜய் சங்கர் திருமணம் செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திருமணம் ஆன படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Similar News