செய்திகள்
ரஹானே, புஜாரா

நான்கு டெஸ்டிலும் இடம் பிடித்த இரண்டே பேர்... இந்திய அணியை புரட்டிப்போட்ட காயம்

Published On 2021-01-15 16:39 IST   |   Update On 2021-01-15 16:39:00 IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்டிலும் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் மட்டுமே விளையாடியுள்ளனர். மற்றவர்கள் காயத்தால் நான்கிலும் விளையாடவில்லை.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதில் இருந்து மீண்டு மெல்போர்ன் டெஸ்டில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதனால் டெஸ்ட் தொடர் கடும் சவாலாக இருந்தது. ஆனால் இந்திய அணி, வீரர்கள் காயத்தால் சற்று நிலைகுலைந்து போனது. முதல் டெஸ்டில் முகமது ஷமி காயம் அடைந்தார். விராட் கோலி அடிலெய்டு டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்பினார்.

2-வது டெஸ்டில் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டின்போது ஜடேஜா, ஹனுமா விஹாரி, அஸ்வின், பும்ரா ஆகியோர் காயம் அடைந்தனர். இதனால் டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோர் 4-வது டெஸ்டில் இடம் பிடித்தனர்.

மயங்க் அகர்வால் 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் விளையாடவில்லை. ரோகித் சர்மா முதல் இரண்டு டெஸ்டில் விளையாடவில்லை. இந்த வகையில் ரஹானே, புஜாரா ஆகியோர் மட்டுமே நான்கு டெஸ்டிலும் இடம் பிடித்துள்ளனர்.

Similar News