செய்திகள்
ராஜீவ் சுக்லா

பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா மீது இரட்டை ஆதாய புகார்: பதில் அளிக்க உத்தரவு

Published On 2021-01-14 20:03 IST   |   Update On 2021-01-14 20:03:00 IST
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிராக இரட்டை ஆதாய புகார் கொடுக்கப்பட்டதால் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கீழ் இருப்பவர்கள் பிசிசிஐ-யுடன் தொடர்புடைய மற்ற தொழில்களில் தங்களை ஈடுபடுத்தக்கூடாது. அப்படி ஈடுபடுத்தினால் இரட்டை ஆதாயம் (conflict of interest) பெறும் வகையில் ஈடுபட்டதாக கருதப்படும்.

விராட் கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலி உள்பட பலர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் பிசிசிஐ-யின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா மீதும் இரட்டை ஆதாய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க நெறிமுறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிசிசிஐ மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News