செய்திகள்
சிட்னி மைதானம்

3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில்தான் நடைபெறும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Published On 2020-12-29 19:13 IST   |   Update On 2020-12-29 19:13:00 IST
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில்தான் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்தது.

3-வது போட்டி அடுத்த மாதம் 7-ந்தேதி சிட்னியிலும், 4-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் ஜனவரி 5-ந்தேதியும் தொடங்குகிறது.

சிட்னி நகரில் தற்போது 
கொரோனா வைரஸ்
 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சிட்னி நகரம் அமைந்துள்ள மாநிலத்தை ஒட்டியுள்ள மற்ற மாநிலங்கள் சிட்னியில் இருந்து வரும் நபர்கள் 14 நாடகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளன.

இதனால் 3-வது போட்டி சிட்னியில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் போட்டி அட்டவணைப்படி 3-வது போட்டி சிட்னியில்தான் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மாநில அரசிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

Similar News