செய்திகள்
கூடுதலாக கொஞ்சம் நேரம் எடுத்திருக்க வேண்டும்: ராபின் உத்தப்பா சொல்கிறார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 88 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழப்பதற்கான காரணத்தை ராபித் உத்தப்பா விளக்கியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷார்ஜாவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 216 ரன்கள் அடித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 224 இலக்கை விரட்டி சாதனைப் படைத்தது.
ஆனால் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 175 இலக்கை எட்ட முடியாமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஷார்ஜா மைதானம் சிறியது. அதிரடி ஆட்டத்திற்கு ஏற்றது. ஆனால் துபாய் ஆடுகளம் சற்று ட்ரிக் ஆனது. கவனமாக விளையாட வேண்டும்.
88 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டை இழப்பதற்கான காரணம் குறித்து ராபித் உத்தப்பா கூறுகையில் ‘‘போட்டி செல்ல செல்ல ஆடுகளம் சற்று ஸ்லோவானது. பந்து சற்று நின்று வருவது போன்று இருந்தது. இதனால் நாங்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு ஆடுகளத்திற்கு ஏற்றபடி தங்களை தயார்படுத்திக் கொண்டு, அதன்பின் பந்து வீச்சாளர்களை அடித்து விளையாடியிருக்க வேண்டும் என்று உணர்ந்தோம்’’ என்றார்.