செய்திகள்
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய- ரஷிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்ட இந்தியா-ரஷியாவுக்கு இணைந்து வழங்கப்பட்டது. பட்டம் வென்ற இருநாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷியா அணிகள் மோதின. கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது.
முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சனை காரணமாக விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இன்டர்நெட் பிரச்சனை காரணமாக இரண்டு இந்திய வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காய்களை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து இந்தியா முறையிட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போட்டி நடத்தும் அமைப்பு இந்தியாவும், ரஷியாவும் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவித்தது.
இந்நிலையில், ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய-ரஷிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,’ ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நமது வீரரக்ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வீரர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. அவர்களின் வெற்றி மற்ற செஸ் வீரர்களுக்கு நிச்சயம் ஊக்கத்தை அளிக்கும். ரஷிய அணியினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.