செய்திகள்
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: இந்தியா- ரஷியா இணைந்து சாம்பியன்
இன்டர்நெட் தடையால் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இணைந்து வழங்கப்பட்டது.
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷியா அணிகள் மோதின. முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சினையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இரண்டு இந்திய வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காய்களை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா இதனை எதிர்த்து முறையிட்டது. அதன்பின் இந்தியாவும், ரஷியாவும் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய செஸ் ஜாம்வான் விஸ்வநான் ஆனந்த் ‘‘நாம் சாம்பியன்ஸ், ரஷியாவுக்கு வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது.