செய்திகள்
ஆடுகளம் மூடப்பட்டிருக்கும் காட்சி

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்: மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்

Published On 2020-07-16 09:46 GMT   |   Update On 2020-07-16 09:46 GMT
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மழைக் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. அதற்கு முன் 3 மணியளவில் டாஸ் சுண்டப்படும். மான்செஸ்டரில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News