செய்திகள்
அனில் சவுத்ரி

கிரிக்கெட் நடுவரால் செல்போன் நெட்வொர்க்: ஹீரோவாக கொண்டாடும் கிராம மக்கள்

Published On 2020-07-15 12:40 GMT   |   Update On 2020-07-15 12:40 GMT
பிசிசிஐ நடுவர் அனில் சவுத்ரி செல்போன் பேசுவதற்காக சுமார் அரை கிலோமீட்டர் சென்று மரத்தில் ஏறி பேசிய சம்பவம் அறிந்து ஒரு நிறுவனம் நெட்வொர்க் அமைத்துள்ளது.
பிசிசிஐ-யின் கிரிக்கெட் போட்டி நடுவராக இருப்பவர் அனில் சவுத்ரி. தற்போது ஐசிசி-யின் எலைட் குரூப்பில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 23-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனில் சவுத்ரி உத்தர பிரதேசத்தில் உள்ள தனது பூர்விக கிராமமான டாங்க்ரோல் சென்றிருந்தார். டெல்லியில் உள்ள குடும்பத்தினரிடம் பேசுவதற்கு செல்போனை எடுத்தபோதுதான், அந்த கிராமத்தில் செல்போன் நெட்வொர்க் கிடைக்காது என்பது அவருக்கு தெரியவந்தது. மேலும், நெட்வொர்க் கிடைக்க சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

விவசாய நிலத்திற்குள் சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஒரு மரத்தில் ஏறினார். அப்போது செல்போனில் டவர் கிடைத்தது. அதன்பின் தனது குடும்பத்தினரிடம் பேசினார்.

இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஒரு நெட்வொர்க் நிறுவனம் அந்த கிராமத்தில் செல்போன் டவர் அமைத்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் விவசாய நிலத்திற்குச் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து செல்போனில் பேச முடிகிறது.

தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் எளிதாக பாடம் கற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் கிராம மக்கள் அனில் சவுத்ரியை ஹீரோவா பார்க்கிறார்கள்.

இந்த முயற்சி என்னுடைய கிராமத்திற்கு பயனளிக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஜலந்தரில் உள்ள பேராசிரியர் ஒருவரால் தற்போது பாடங்கள் நடத்த முடிகிறது. மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஏனென்றால், அவர்கள் இனிமேல் விவசாய நிலங்களில் கொசுக்கடிக்கிடையே ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபட தேவையில்லை. வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கலாம்’’ என்றார்.

அந்த கிராமத்தின் அருகில் வசித்து வரும் ராம்குமார் என்பவர் பணம் பரிமாற்றம் செய்யும் மையம் ஒன்று வைத்துள்ளார். பணம் அனுப்ப மிகவும் கடினமாக இருக்கும். தற்போது எளிதாக பணம் அனுப்ப முடிகிறது. முன்னதாக மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகும். தற்போது சில மணி நேரங்களில் அனுப்ப முடிகிறது.



அவருடைய முயற்சிக்கு நான் அனில் சவுத்ரி அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். எங்களுக்கு அவர் ஹீரோ. பொது  முடக்கத்தின்போது இது சின்ன  விஷயம். ஆனால், எங்களுக்கு நீண்ட கால உதவியாக அமைந்துள்ளது. எங்களுடைய பஞ்சாயத் உறுப்பினர் மணிஷ் சவுகான், உள்ளூர் எம்எல்ஏ தெஜிந்தர் நார்வால் ஆகியோர் ஜியோ நெட்வொர் நிறுவனத்திடம் பேசு டவரை கொண்டுவந்துள்ளனர். வாழ்க்கையை எளிதாக்கிய அனைவரும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

‘‘தற்போது அங்குள்ள மக்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க கேட்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் நான் வெறும் நடுவர் மட்டுமே’’ என்று தெரிவித்துவிட்டேன் என்று அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News