செய்திகள்
ரோகித் சர்மா

ஐபிஎல்-லில் ஹிட்மேன் வாங்கும் சம்பளம் 18 பாக். வீரர்களின் ஒரு வருட சம்பளத்தின் இரு மடங்காம்.....

Published On 2020-07-06 10:34 GMT   |   Update On 2020-07-06 10:34 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் 2020-21 மத்திய ஒப்பந்தத்தில் உள்ள 18 வீரர்களின் ஆண்டு வருமானத்தை விட ஐபிஎல்-லில் ரோகித் சர்மாவின் சம்பளம் இரண்டு மடங்கு அதிகமாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிடும். கடந்த மே மாதம் 2020-21 -ம் ஆண்டுக்கான ஏ, பி, சி. வளர்ந்து வரும் வீரர்கள் என நான்கு பிரிவுகளாக வீரர்களை பிரித்து பட்டியலை வெளியிட்டது. ‘ஏ’ பிரிவில் மூன்று வீரர்களும், ‘பி’ பிரிவில் 9 வீரர்களும், ‘சி’ பிரிவில் ஆறு வீரர்களும், வளர்ந்து வரும் வீரர்கள் பட்டியலில் மூன்று வீரர்களும் இடம் பிடித்தனர்.

‘ஏ’ பிரிவில் ஒரு வீரருக்கு தலா இந்திய பண மதிப்பில் 60,92,050 ரூபாய் சம்பளமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘பி’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 41,54,193 ரூபாய் சம்பளமும், ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 30,36,398 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

18 வீரர்களின் ஒரு வருடத்திற்கான ஒட்டுமொத்த சம்பளம் 7.4 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வருடத்திற்கு 15 கோடி ரூபாய் வாங்குகிறார்.

ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஒப்பந்த வீரர்கள் வாங்கும் சம்பளத்தை விட ரோகித் சர்மா இரண்டு மடங்கு சம்பளம் வாங்குகிறார்.
Tags:    

Similar News