செய்திகள்
கிரிக்கெட் ஸ்டேடியம் - கோப்புப்படம்

உலகின் 3-வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் - ஜெய்ப்பூரில் கட்டப்படுகிறது

Published On 2020-07-05 13:04 GMT   |   Update On 2020-07-05 13:04 GMT
ரூ.350 கோடி செலவில் உலகின் 3-வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஜெய்ப்பூரில் கட்டப்பட இருப்பதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் ஏற்கனவே சவாய் மான்சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த நிலையில் அங்கு புதியதாக கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று ரூ.350 கோடி செலவில் கட்டப்பட இருப்பதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.

100 ஏக்கர் நிலப்பரப்பில் 75 ஆயிரம் இருக்கை வசதியுடன் அமைய உள்ள இது ஆமதாபாத், மெல்போர்னுக்கு அடுத்தபடியாக உலகின் 3-வது பெரிய ஸ்டேடியமாக இருக்கும். ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலை பகுதியில் அமைய இருக்கும் இந்த ஸ்டேடியத்தின் கட்டுமான பணி அடுத்த 4 மாதத்துக்குள் தொடங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News