செய்திகள்
வாசிம் ஜாபர்

சச்சின், ரோகித், விராட் ஆகியோரில் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்தவர் யார்?: வாசிம் ஜாபர் மதிப்பீடு

Published On 2020-07-03 11:30 GMT   |   Update On 2020-07-03 11:30 GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்துள்ள வாசிம் ஜாபர் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரில் சிறந்தவரை தேர்வு செய்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக விளையாடியவர் வாசிம் ஜாபர். தொடக்க காலத்தில் மிகச் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய போதிலும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார். இவர் சச்சின் தெண்டுல்கரை விட விராட் கோலிதான் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலி 248 ஒருநாள் போட்டிகளில் 11 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். சராசரி 60-ஐ தொட்டுள்ளது. 43 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ரன்கள் அடித்துள்ளார். 490 சதங்கள் அடங்கும். சராசரி 44.83. இதை குறிப்பிட்டு வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘‘சவுரவ் கங்குலி 2000-த்திற்குப் பிறகு அணியை சிறப்பாக கட்டமைத்தார். வீரர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர்களுக்கு அதிகமாக வாய்ப்புகளை வழங்கினார். சேவாக்கை தொடக்க வீரராக உருவாக்கினார். ஜாகீர் கான்,  யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்றவர்களை உருவாக்கினார்.



நீங்கள் ஒன்றை இலக்கும்போது அதி ஏராளமான மாற்றத்தை உருவாக்கும். ஒரு தொடருக்குப்பின் மேட்ச்-பிக்சிங் விவகாரம் நடைபெற்றது. இதனால் டெஸ்ட கிரிக்கெட் தொடர் நீண்ட நாட்களுக்கு நடைபெறவில்லை. அதன்பின் அணியில் ஏராளமான அதிரடி நீக்கம் மற்றும் மாற்றம் நடைபெற்றது. நான் சிறப்பாக விளையாடவில்லை. அது மற்றொருவருக்கு வழிவகுத்தது.

நான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, சிறந்த வீரராக மாறினேன். ஆனால், அதன்பின் எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. வருடத்திற்கு வருடம் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் குவித்தேன். ஆனால், ஒருபோதும் அணியில் மீண்டும் இடம் பிடிக்கவில்லை. 30 வயதை எட்டும்போது சற்று ஏமாற்றம் அடைந்தேன். அதிக அளவில் முதிர்ச்சி அடைந்து என்னுடைய ஆட்டத்தை புரிந்து கொண்டேன். இந்திய அணிக்காக மீண்டும் அழைக்கப்படாதது வருத்தமே’’ என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News