செய்திகள்
இலங்கை கிரிக்கெட் போர்டு

டி20 லீக்கை அடுத்த மாதம் தொடங்க இலங்கை கிரிக்கெட் போர்டு திட்டம்

Published On 2020-07-02 10:37 GMT   |   Update On 2020-07-02 10:37 GMT
ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் லீக்கை அடுத்த மாதம் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் டி20 லீக்கை நடத்துவதுபோல் ஆஸ்திரேலியா பிக் பாஷ், பாகிஸ்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக், வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரிமீயர் லீக் என ஒவ்வொரு நாடுகளும் நடத்தி வருகின்றன.

இலங்கை அணி முதன்முறையாக இந்த வருடம் டி20 லீக்கை அறிமுகம்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டின் எல்லை  மூடப்பட்டதால் அந்த திட்டம் தள்ளிப்போனது.

தற்போது இலங்கையில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆகஸ்ட் 8-ல் இருந்து 22-ந்தேதி ஐந்து அணிகள் பங்கேற்கும் டி20 லீக்கை தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக ஒவ்வொரு அணிகளும் 6 வெளிநாட்டு வீரர்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இலங்கை அரசு ஆகஸ்ட் 1-ந்தேதி வரை சர்வதேச எல்லையை மூடியுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News