செய்திகள்
பில் சிம்மன்ஸ்

பில் சிம்மன்ஸின் பதவிக்கு ஆபத்து இல்லை: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு திட்டவட்டம்

Published On 2020-07-02 10:24 GMT   |   Update On 2020-07-02 10:24 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதால் சர்ச்சைக்குள்ளானார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. உயிர் பாதுகாப்பு சூழ்நிலைக்குள் நடக்கும் இந்த தொடரில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்ற அவரது மாமனார் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இதனால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பர்படோஸ் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியது. சிந்தனையற்ற மற்றும் பொறுப்பற்ற செயல் என்று பர்படோஸ் கிரிக்கடெ் சங்கத்தின் தலைவர் கோன்டே ரிலே கடுயைாக சாடியிருந்தார்.

இந்நிலையில் பில் சிம்மன்ஸ் பதவிக்கு ஆபத்து இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தலைவர் ரிக்க ஸ்கெர்ரிட் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு பில் சிம்மன்ஸ்க்கு ஆதரவாக இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். என்ன நடந்தது என்பது பெரிய விஷயல் அல்ல.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக தலைமை பயிற்சியாளருக்கான தேடுதலை தொடங்கினோம். சிறந்த நபரை அந்த வேலைக்கு அமர்த்தியுள்ளோம். இன்னும் அவர் சிறந்த நபர்தான்’’ என்றார்.
Tags:    

Similar News