செய்திகள்
விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலியிடம் இன்னும் 5 ஆண்டுகள் பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன்: ஏபி டி வில்லியர்ஸ்

Published On 2020-07-02 15:09 IST   |   Update On 2020-07-02 15:11:00 IST
இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்றும் 3 முதல் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார் என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்த ஊரடங்கு கூட விராட் கோலிக்கு நல்லதாக இருக்கலாம். இதன் மூலம் அவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் திரும்ப முடியும். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் விராட் கோலியிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன்.

ஒரு பேட்ஸ்மேனாக கோலி என்னை விட நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் களம் கண்டால் 15 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று விரும்புவார்’’ என்றார்.

Similar News