செய்திகள்
செர்ரி ஏ கால்பந்து லீக்

‘செர்ரி ஏ’ கால்பந்து லீக்கை ஆகஸ்ட் 20-க்குள் முடிக்க திட்டம்: அடுத்த சீசன் செப்டம்பரில் ஆரம்பம்

Published On 2020-05-22 08:47 GMT   |   Update On 2020-05-22 08:47 GMT
இத்தாலியின் முதன்மை கால்பந்து லீக்கான ‘செர்ரி ஏ’-யை ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் முடித்துவிட்டு, 2020-2021 சீசனை செப்டம்பர் 1-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கால்பந்து லீக் ‘செர்ரி ஏ’நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்றின் வீரியம் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் போட்டிகளை நடத்த விளையாட்டு அமைப்புகள் தயாராகி வருகின்றன. மீதமுள்ள ‘செர்ரி ஏ’ கால்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் முடிக்கப்படும் என்றும், 2020 - 2021 சீசன் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கும் என்று இத்தாலி கால்பந்து பெடரேசன் அறிவித்துள்ளது.

ஜூன் 13-ந்தேதி ‘செர்ரி ஏ’ லீகை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் ஜூன் 15-ந்தேதி வரை தொடங்க வாய்ப்பில்லை என்று  தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே யுவென்டஸ் அணி, அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துவிட்டோம். யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News