செய்திகள்
அமித் பன்ஹால்

விருது நடைமுறையை மாற்றுங்கள் - மந்திரிக்கு அமித் பன்ஹால் கடிதம்

Published On 2020-05-16 05:34 GMT   |   Update On 2020-05-16 05:34 GMT
தற்போதைய விருது நடைமுறையை மாற்ற வேண்டும் என்று உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் அமித் பன்ஹால் விளையாட்டுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஒரே இந்தியரான அமித் பன்ஹால் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அர்ஜூனா, கேல்ரத்னா போன்ற தேசிய விருதுகளை பெறுவதற்கு தற்போதைய நடைமுறை என்னவென்றால் வீரர், வீராங்கனைகள் முதலில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் விளையாட்டு கமிட்டி ஆராய்ந்து விருதுக்கு தேர்வு செய்யும்.

இதில் நிறைய பாகுபாடான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. விருதுக்கு தகுதியானவர்கள் நிராகரிக்கப்பட்டதும், பிறகு அவர்கள் நீதிமன்றத்தை அணுகியதும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. விருது நடைமுறை வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். உலகில் பெரும்பாலான உயரிய விருதுகள் வீரர்கள் விண்ணப்பம் அனுப்பி கேட்காமலேயே அவர்களது விளையாட்டு சாதனைகளை பார்த்து வழங்கப்படுகின்றன.

கேட்காமலேயே விருதுகளை வழங்குவது தான் அச்சாதனைக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரம். எனவே தற்போதைய விருது நடைமுறையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று அதில் கூறியுள்ளார். 2012-ம் ஆண்டு ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அமித் பன்ஹாலுக்கு அர்ஜூனா விருது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News