செய்திகள்
பிஎஸ்ஜி ஜெர்சி

கொரோனா வைரஸ் தொற்று: டாக்டர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலம் ஜெர்சிகளை விற்று நிதி திரட்டிய பிஎஸ்ஜி

Published On 2020-03-27 11:41 GMT   |   Update On 2020-03-27 11:41 GMT
கொரோனா வைரஸ் தாக்கியவர்களை காப்பாற்ற போராடும் மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக பிரத்யேக ஜெர்சியை தயாரித்து ஆன்லைன் மூலம் விற்று நிதி திரட்டியுள்ளது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கிளப்.
கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளி்ல் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை அதிக அளவில் பாதித்துள்ளது. பிரான்சில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நி்லையில் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு பயன்படுத்த உபகரணங்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு உதவ முன்னணி நிறுவனங்கள், பிரபல வீரர்கள் நிதி வழங்கி உதவி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரான்சின் முன்னணி கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி பிரத்யேகமாக வீரர்கள் அணியும் ஜெர்சியை தயாரித்து அவர்களுடைய ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்தது.

1500 ஜெர்சிகள் விற்றதன் மூலம் 2 லட்சம் யூரோ கிடைத்ததாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News