செய்திகள்
நசிர் ஹுசைன்

தற்போது விளையாட்டு தேவையில்லாததுதான்... ஆனால் விரைவில் சகஜ நிலை திரும்ப வேண்டும்: நசிர் ஹுசைன் சொல்கிறார்

Published On 2020-03-25 14:58 GMT   |   Update On 2020-03-25 14:58 GMT
கொரோனா வைரசால் போட்டிகள் ஒத்திவைப்பு மற்றும் ரத்து ஆகியவற்றால் உலகளவில் கிரிக்கெட் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நசிர் ஹுசைன் கவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பீதியால் உலகளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கிரிக்கெட் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சில தொடர்கள் ஒத்திவைப்பட்டுள்ளது.

தற்போது காட்டுத்தீ போன்று பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் வந்து உலகம் எப்போது சகஜ நிலைக்கு திரும்பும் என்பதை யாராளும் கூற முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் என்பது தேவையற்றதுதான். ஆனால் நாம் விரைவில் அதற்கு திரும்ப வேண்டும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசிர் ஹுசைன் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து நசிர் ஹுசைன் கூறுகையில் ‘‘தற்போதுள்ள நிலையில் விளையாட்டு தேவையற்றதுதான். உலகில் ஏராளமான பிரச்சனைகள் தற்போது உள்ளன. விளையாட்டு ஏராளமானோரின் வாழ்க்கையில் எப்படி மிகப்பெரிய அளவில் விளையாடுகிறது என்பதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. முடிந்த அளவிற்கு விளையாட்டு விரைவில் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம்.

ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்துவதைவிட ரசிகர்கள் பார்க்கும் வகையில் நாம் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் இது முற்றிலும் பாதுகாப்பை பொறுத்தது. ஏனென்றால், யாராவது ஒரு வீரர் வைரசால் பாதிக்கப்பட்டால் மீண்டும் ஒட்டுமொத்தமாக போட்டியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றார்.
Tags:    

Similar News