செய்திகள்
சவுரவ் கங்குலி

எனது நகரை இப்படி பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறார் சவுரவ் கங்குலி

Published On 2020-03-24 13:46 GMT   |   Update On 2020-03-24 13:46 GMT
கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரசால் முக்கியமான நகரங்கள் வெறிச்சோடிய நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தவித்து வருகிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டி அச்சுறுத்தும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன்காரணமாக முக்கியமான இடங்கள் வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வெறிச்சோடிய கொல்கத்தா நகர படங்களை டுவிட்டர் பக்கத்தில் அப்லோடு செய்து இதுபோன்று எனது நகரத்தை பார்ப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளார்.

சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘என்னுடைய நகரத்தை இப்படி பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. .. பாதுகாப்பாக இருப்போம்... இந்த சூழ்நிலை விரைவில் மிகவும் சிறப்பான வகையில் மாறும்’’என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News