செய்திகள்
இந்திய ஓபன் பேட்மிண்டன்

கொரோனா பீதி இருந்தாலும் இந்திய ஓபன் பேட்மிண்டன் நடைபெறும் என அறிவிப்பு

Published On 2020-03-11 16:06 IST   |   Update On 2020-03-11 16:06:00 IST
கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்திய ஓபன் பேட்மிண்டன் வருகிற 24-ந்தேதி முதல் மார்ச் 29-ந்தேதி வரை நடைபெறும் வகையில் ஏற்கனவே போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் போன்ற ஆட்டங்களை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா ஒபன் பேட்மிண்டன் தொடர் நடைபெறும் என இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ‘‘திட்டமிட்டபடி மார்ச் 24-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை நடைபெறும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் துாிதமான வகையில் மேற்கொள்ளப்படும். போட்டியை ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் (Closed Doors) நடத்தும் வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அடங்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News