செய்திகள்
ரஞ்சி டிராபி அரையிறுதி: முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 304, குஜராத் திணறல்
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி முதல் அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா 304 ரன்கள் குவித்த நிலையில், குஜராத் 119 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
சவுராஷ்டிரா - குஜராத் அணிகள் மோதும் ரஞ்சி டிராபியின் முதல் அரையிறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சவுராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்தது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்திருந்தது. ஜாக்சன் 69 ரன்களுடனும், ஜானி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஜாக்சன் சதம் அடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜானி 29 ரன்கள் சேர்த்தார். மன்கட், ஜடேஜா தலா 15 ரன்கள் அடிக்க சவுராஷ்டிரா 304 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது.
பின்னர் குஜராத் முதல் இன்னிங்சை தொடங்கியது. சவுராஷ்டிரா வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் குஜராத் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 119 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.