செய்திகள்
சதமடித்த ஹென்ரிச் கிளாசன்

கிளாசன் சதமடித்து அசத்தல் - ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

Published On 2020-03-01 06:14 GMT   |   Update On 2020-03-01 06:14 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.
பெர்ல்:

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்ல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஹென்ரிச் கிளாசன் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 123 ரன்களில் அவுட்டானார். டேவிட் மில்லர் 64 ரன்னும், கைல் வெர்னே 48 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா அணியினரின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவன் ஸ்மித் 76 ரன்னும், லாபஸ் சாக்னே 41 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News